/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கொலை வழக்கில் பா.ஜ., பிரமுகருக்கு ஆயுள்சிறை
/
கொலை வழக்கில் பா.ஜ., பிரமுகருக்கு ஆயுள்சிறை
ADDED : அக் 16, 2025 06:46 AM
கோவை: கோவை, நல்லாம்பாளையம், கணேஷ் லே அவுட் பகுதியில் வசித்து வந்தவர் நாகராஜ்,21; அதே பகுதியிலுள்ள பெயின்ட் கம்பெனியில், சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். அதே பகுதியிலுள்ள அன்னையப்பன் வீதியில் கந்தசாமி,36, வசித்து வருகிறார்.
கணபதி பகுதி பா.ஜ., துணைத்தலைவராக பொறுப்பு வகித்து வந்தார். 2018ம் ஆண்டு கமிட்டி அமைத்து நன்கொடை வசூலித்து, அப்பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடினர். மீதி பணத்தில், ஆலாந்துறை, இக்கரை போளுவம்பட்டி பகுதியிலுள்ள தோட்டத்தில் 2018, செப்., 29ல் கிடா வெட்டி விருந்து வைத்தனர். இதில்,கந்தசாமி, நாகராஜ் மற்றும் பலர் பங்கேற்றனர்.
கிடா விருந்து முடிந்த மறுதினம், விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடியது தொடர்பாக கந்தசாமியிடம், நாகராஜ் வரவு - செலவு கணக்கு பற்றி கேட்டுள்ளார்.
அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த கந்தசாமி, கத்தியால் நாகராஜ் வயிற்றில் குத்தினார். படுகாயமடைந்த நாகராஜ் உயிரிழந்தார்.
ஆலாந்துறை போலீசார் விசாரித்து, கந்தசாமியை கைது செய்து கொலை வழக்கு பதிந்தனர். அவர் மீது,கோவை, ஐந்தாவது கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில், வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
விசாரித்தநீதிபதி சிவகுமார், குற்றம் சாட்டப்பட்ட கந்தசாமிக்கு, ஆயுள்சிறை, 10,000 ரூபாய் அபராதம் விதித்து, நேற்று தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் மோகன் பிரபு ஆஜரானார்.