/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வால்பாறைக்கு வந்த சாம்பல் வாலாட்டி பறவை; ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி
/
வால்பாறைக்கு வந்த சாம்பல் வாலாட்டி பறவை; ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி
வால்பாறைக்கு வந்த சாம்பல் வாலாட்டி பறவை; ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி
வால்பாறைக்கு வந்த சாம்பல் வாலாட்டி பறவை; ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி
ADDED : அக் 16, 2025 06:50 AM

வால்பாறை: கோவை மாவட்டம், வால்பாறை அடுத்துள்ள சின்கோனா (டான்டீ) அரசு உயர்நிலைப்பள்ளி, வனச்சூழலின் மத்தியில் அமைந்துள்ளது. இந்தப்பகுதிக்கு ஆண்டு தோறும் வெளிநாட்டு பறவைகள்அதிக அளவில் வருகின்றன.
ஆண்டு தோறும், அக்டோபர் மாதங்களில் இமயமலை பகுதியில் இருந்து 2,000 கி.மீ., பயணித்து, சாம்பல் வாலாட்டி பறவைகள் வால்பாறைக்கு வருகின்றன. வால்பாறை அடுத்துள்ள சின்கோனா அரசு உயர்நிலைப்பள்ளியில்முன்னாள் மாணவர்கள்கடந்த ஏழுஆண்டு களாக, பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பறவைகளின் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.
வால்பாறையில் பருவமழைக்கு பின்வெயில் நிலவும் நிலையில், இமயமலை பகுதியில் இருந்து, வால்பாறை வனப்பகுதியில்சாம்பல் வாலாட்டிபறவைகள்முகாமிட்டுள்ளன.
சின்கோனா அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார், வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் சிவன்ராஜ்ஆகியோர் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி, பறவைகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியம் குறித்தும், இயற்கையை பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் பேசினர்.
இது குறித்து ஆசிரியரும், பறவைகள் ஆராய்ச்சியாளருமான செல்வகணேஷ் கூறுகையில், ''இமயமலையில்தற் போது நிலவும் கடும் பனிப்பொழிவுமற்றும் கடுங்குளிர் காரணமாக சாம்பல் வாலாட்டி பறவைகள் வால்பாறைக்கு வந்துள்ளன. கோடை காலங்களில் குளிர்பிரதேசத்துக்கு திரும்பி விடும்,'' என்றார்.