/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பட்டாசு வெடித்து பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
/
பட்டாசு வெடித்து பா.ஜ.,வினர் கொண்டாட்டம்
ADDED : நவ 24, 2024 11:37 PM
அன்னுார்; மஹாராஷ்டிரா தேர்தல் வெற்றியை, பா.ஜ., வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
மஹாராஷ்டிராவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில், பா.ஜ., கூட்டணி மொத்தம் உள்ள 288 இடங்களில், 234 இடங்களில் வெற்றி பெற்றது. இதையடுத்து, மீண்டும் பா.ஜ., அரசு பொறுப்பேற்க உள்ளது.
அன்னுார் கைகாட்டியில், பா.ஜ., சார்பில், வெற்றி கொண்டாட்டம் நடந்தது. சரவெடிகள் வெடிக்கப்பட்டது. பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
பிரதமர் மோடி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆகியோரை வாழ்த்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
பா.ஜ., வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயபால், வடக்கு ஒன்றிய தலைவர் திருமூர்த்தி, பிரச்சார பிரிவு மாவட்ட செயலாளர் கேசவ நடராஜ் உள்பட மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.