/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே மேலாளருக்கு பா.ஜ. கட்சியினர் மனு
/
ரயில்வே மேலாளருக்கு பா.ஜ. கட்சியினர் மனு
ADDED : ஆக 15, 2025 08:47 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனை ஆய்வு செய்த, பாலக்காடு கோட்ட ரயில்வே மேலாளரிடம் பா.ஜ.வினர் மனு அளித்தனர்.
கிணத்துக்கடவு ரயில்வே ஸ்டேஷனில் பாலக்காடு கோட்ட ரயில்வே மேலாளர் மாதுகர் ரோட் ஆய்வு செய்தார். அவரிடம், பா.ஜ. சார்பில் மனு அளிக்கப்பட்டது.
அதில், பிளாட்பார்ம் நீளத்தை அதிகப்படுத்த வேண்டும். ரயில்வே ஸ்டேஷனில் உள்ள கழிப்பறையை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் ரோட்டோரம் இருக்கும் செடி மற்றும் புதரை அகற்றம் செய்ய வேண்டும். மேலும், மேட்டுப்பாளையம் முதல் தூத்துக்குடி வரை தினசரி ரயில் இயக்க வேண்டும். இவையுள்ளிட்ட, பல்வேறு ரயில்வே தொடர்பான சேவைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.