ADDED : ஆக 10, 2025 10:38 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேட்டுப்பாளையம்; தமிழகத்தில் பா.ஜ., சார்பில் சுதந்திர தினத்தை சிறப்பாக கொண்டாடிட மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில பொதுச்செயலாளர் ஏ.பி. முருகானந்தம் தலைமையில் குழு அமைத்துள்ளார்.
இதன் ஒருபகுதியாக மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் பா.ஜ.,வினர் நேற்று தூய்மை பணியில் ஈடுபட்டனர். செடிகள், குப்பைகள், ஒரு முறை உபயோகப்படுத்தப்படும் தண்ணீர் பாட்டில்களை போன்றவற்றை பா.ஜ.,வினர் காலை 6 மணி முதல் 9 மணி வரை அப்புறப்படுத்தினர். இந்த நிகழ்வுக்கு கோவை பா.ஜ., வடக்கு மாவட்ட பொது செயலாளர் விக்னேஷ் தலைமை வகித்தார். காரமடை ஒன்றிய தலைவர்கள் சுரேஷ்குமார், சூரியநாதன், நகர தலைவர் சதீஷ்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான பா.ஜ.,வினர் கலந்து கொண்டனர்.---