/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'கருத்து சொல்பவர்களை கைது செய்வது புதிதல்ல' ; போலீசார் மீது பா.ஜ.,எம்.எல்.ஏ., வானதி காட்டம்
/
'கருத்து சொல்பவர்களை கைது செய்வது புதிதல்ல' ; போலீசார் மீது பா.ஜ.,எம்.எல்.ஏ., வானதி காட்டம்
'கருத்து சொல்பவர்களை கைது செய்வது புதிதல்ல' ; போலீசார் மீது பா.ஜ.,எம்.எல்.ஏ., வானதி காட்டம்
'கருத்து சொல்பவர்களை கைது செய்வது புதிதல்ல' ; போலீசார் மீது பா.ஜ.,எம்.எல்.ஏ., வானதி காட்டம்
ADDED : நவ 18, 2024 06:24 AM

கோவை ; 'தமிழகத்தில் அரசுக்கு, எதிராக கருத்து பதிவிடுவோரையும் பேசுபவர்களையும். கைது செய்வது புதிதல்ல' என்று வானதிசீனிவாசன் கூறினார்.
கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட வ.உ.சி பூங்காவில் தானியங்கி குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை மக்கள் பயன்பாட்டுக்கு நேற்று அர்ப்பணித்து வைத்தார் கோவை தெற்கு தொகுதி பா.ஜ.,எம்.எல்.ஏ.,வானதிசீனிவாசன்.
அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட மக்களின் பொருளாதார சுமையை குறைக்கும் வகையில், பாதுகாக்கப்பட்ட குடிநீர் மக்களுக்கு போய் சேர வேண்டும் என்ற எண்ணத்தில் தொகுதி முழுக்க, 11,000 குடும்பங்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை தானியங்கி இயந்திரம் வாயிலாக வழங்கியுள்ளோம்.
இன்று முதல் மேலும், 2,000 குடும்பங்கள் இச்சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். வ.உ.சி பூங்கா அருகிலேயே இந்த இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளதால் அன்றாடம் பூங்காவுக்கு வருவோர் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கோவையில் இ.ம.க., இளைஞர் அணி தலைவர் கைதை கண்டித்து நடத்திய போராட்டத்தில் அக்கட்சி தலைவர் மற்றும் கல்லுாரி மாணவர்கள் ஈடுபட்டு கைதாகியுள்ளதில் தவறொன்றும் இல்லை. தமிழகத்தில் அரசுக்கு, எதிராக கருத்து பதிவிடுவோரையும் பேசுபவர்களையும். போலீசார் கைது செய்வது புதிதல்ல.
எங்களுடைய இயக்கத்தில் சாதாரணமாக ஒரு போஸ்ட் போட்டதற்கு ஒரு கிரிமினலை போல கைது செய்துள்ளனர். இது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. கருத்து சுதந்திரம் தி.மு.க ஆட்சிக்கு எதிராக பதிவிடுபவர்களுக்கு கிடையாது.
வன்முறையை தூண்டும் வகையில் பேசினால், அதற்கு நடவடிக்கை எடுத்து தான் ஆக வேண்டும். ஆனால் பிரதமரை விமர்சனம் செய்பவர்களையும் அப்படி செய்தால் நன்றாக இருக்கும். கவர்னரைப் பற்றி எவ்வளவு தூரம் கீழ்த்தரமாக விமர்சிக்க முடியுமோ, அந்த அளவிற்கு விமர்சிப்பது அரசியல் நாகரீகமில்லை. கம்யூ.,கட்சி முத்தரசன் கவர்னரை விமர்சித்தது தவறு.
நடிகை கஸ்தூரி பேசியதற்கு மன்னிப்பு கோரிய பிறகும் தமிழக அரசு கைது செய்திருப்பது தவறு. அவர் சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்வார்.
இவ்வாறு வானதிசீனிவாசன் கூறினார்.