/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளேக் மாரியம்மன் கோவில் இடிக்க பா.ஜ., எதிர்ப்பு
/
பிளேக் மாரியம்மன் கோவில் இடிக்க பா.ஜ., எதிர்ப்பு
ADDED : அக் 15, 2024 10:28 PM
மேட்டுப்பாளையம்,: காரமடை நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகரில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிளேக் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில், சாலையின் ஓரத்தில் ஒதுக்குபுறமாக உள்ள, இந்த கோவிலின் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி நெடுஞ்சாலைத்துறை பகுதியில் அமைந்துள்ளது. இதை இடிப்பதாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகத்திற்கு நோட்டீஸ் அனுப்பினர்.
இதுகுறித்து, பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட துணைத் தலைவர் விக்னேஷ் கூறுகையில், ''யாருக்கும் தொல்லையின்றி, மேம்பாலத்துக்கு அடியில் ஒதுக்குப்புறமாக இருக்கும் கோவிலை, தி.மு.க., முன்னாள் மற்றும் இந்நாள் மூத்த நிர்வாகிகளின் தூண்டுதலின் பேரில், நெடுஞ்சாலை துறை இடிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம். கோவிலின் அருகே உள்ள குடியிருப்பு கட்டடத்துக்கு மறைப்பு ஏற்படுவதால், கோவிலை இடிக்க சதி நடந்து வருகிறது. கோவிலை தொட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்,'' என்றார்.
பா.ஜ., மற்றும் இந்து அமைப்புகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து, கோவிலை இடிப்பதை நெடுஞ்சாலைத்துறையினர் தற்காலிகமாக ஒத்திவைத்தனர்.----