/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அடிப்படை வசதி வேண்டும்: பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்
/
அடிப்படை வசதி வேண்டும்: பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம்
ADDED : மார் 06, 2024 01:51 AM
போத்தனூர்:மலுமிச்சம்பட்டி ஊராட்சியில், அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி, பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மலுமிச்சம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட நரிக்குறவர் காலனியில் கடந்த, 11 ஆண்டுகளாக இல்லாத குடிநீர் வசதி செய்து தரவேண்டும், இரு இடங்களில் அமைக்கப்பட்ட உடற்பயிற்சி கூடங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், குடிநீர் தொட்டி முறையாக பராமரிக்கப்பட வேண்டும், சாலை, குடிநீர், தெரு விளக்கு வசதி வேண்டுமென கோரி, மதுக்கரை ஒன்றிய பா.ஜ., ஒன்றிய தலைவர் சந்திரசேகர் தலைமையில், ஊராட்சி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோரிக்கைகள் குறித்து, மலுமிச்சம்பட்டி ஊராட்சி பா.ஜ., பொறுப்பாளர் ரமேஷ், மதுக்கரை ஒன்றிய செயலாளர் சிவசுப்ரமணியம், மகளிரணி தெற்கு மாவட்ட தலைவர் அருணாதேவி உள்ளிட்டோர் பேசினர். 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

