ADDED : பிப் 05, 2026 05:06 AM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: பா.ஜ. தேசிய பொதுக்கு ழு உறுப்பினர் எச்.ராஜா உடல் நலக் குறைவால், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இவர் உடல் நலம் பெற்று, பூரண குணமடைந்து, விரைவில் வீடு திரும்ப, மேட்டுப்பாளையம் தொகுதி பா.ஜ.வினர், வனபத்ரகாளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்தனர். காலை, 7:00 மணிக்கு நடந்த இந்த பூஜையில், மாவட்ட முன்னாள் தலைவர் சங்கீதா, கூட்டுறவு பிரிவு மாவட்ட தலைவர் செந்தில்குமார், முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன், மயில்சாமி உள்பட கட்சி உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
