/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்
/
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்
ADDED : பிப் 12, 2024 11:06 PM

பெ.நா.பாளையம்;கூடலுார் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, பா.ஜ.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே கூடலுார் நகராட்சிக்கு உட்பட்ட வி.கே.வி., நகர் பகுதியில் உரக்கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். உரக்கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
சாரங்கா நகர் முதல் திருமலை நாயக்கன்பாளையம் வரையிலான ரோடு மற்றும் ஏனைய பிரதான ரோடுகளை உடனடியாக செப்பனிட வேண்டும். பாரதி நகர் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலம், திருமலைநாயக்கன்பாளையத்தில் உள்ள தரைப்பாலம் மழையினால் பாதிக்கப்பட்டு உள்ளது. உடனடியாக அதனை செப்பனிட வேண்டும்.
நகராட்சி குடியிருப்பு பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். போதுமான குடிநீர் மேல்நிலை தொட்டிகளை அமைத்து, அனைத்து பகுதிகளுக்கும், இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். தரமான கொசு மருந்துகளை பயன்படுத்தி, கொசு தொல்லையிலிருந்து பொது மக்களை காக்க வேண்டும். தெரு நாய்களின் எண்ணிக்கை நகராட்சியின் பல பகுதிகளில் அதிகரித்துள்ளன.
நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தி, பொதுமக்களை காக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கூடலுார் கவுண்டம்பாளையத்தில் பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
நிகழ்ச்சிக்கு, கூடலூர் நகர பா.ஜ., தலைவர் மகேந்திரன் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், கோவை வடக்கு பா.ஜ., பொதுச் செயலாளர் சுபாஷ் சந்திர போஸ், ஓ.பி.சி., அணி தலைவர் பாலு, நகர துணை தலைவர் பாஸ்கர், பொருளாளர் சவுந்தரராஜன், மகளிர் அணி தலைவி தனலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.