/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பா.ஜ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
/
பா.ஜ. கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 03, 2025 01:48 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மேற்கு பா.ஜ. கட்சி சார்பில், தி.மு.க.வை கண்டித்து ஜமீன் ஊத்துக்குளியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பொள்ளாச்சி மண்டல் தலைவர் கோகுலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் ஜெகநாதன், மாவட்ட துணை தலைவர் நித்திய லட்சுமி, கிழக்கு மண்டல பார்வையாளர் வெள்ளைச்சாமி முன்னிலை வகித்தனர்.
மாவட்ட விவசாய அணி செயலாளர் கேசவமூர்த்தி, ஆன்மிக பிரிவு மாவட்ட தலைவர் பாபுஜி, பிற மொழி பிரிவு தலைவர் சத்யநாராயணமூர்த்தி கோஷங்களை எழுப்பினர்.
தி.மு.க. அரசின் கனிமவள கொள்ளை, விலைவாசி உயர்வு, பாதுகாப்பு குளறுபடிகள் என பல்வேறு மக்களுக்கு எதிரான ஆளுங்கட்சியின் தவறான போக்கினை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் அருள் சந்திரசேகர், மண்டல் பொது செயலாளர் சக்திவேல், மண்டல் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஒன்றிய பொருளாளர் விவேகானந்தசாமி நன்றி கூறினார்.

