/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சேதமடைந்து காணப்படும் மின்கம்பம்; மாற்றியமைப்பது அவசியம்
/
சேதமடைந்து காணப்படும் மின்கம்பம்; மாற்றியமைப்பது அவசியம்
சேதமடைந்து காணப்படும் மின்கம்பம்; மாற்றியமைப்பது அவசியம்
சேதமடைந்து காணப்படும் மின்கம்பம்; மாற்றியமைப்பது அவசியம்
ADDED : நவ 03, 2025 01:49 AM

மின்கம்பம் சேதம் கிணத்துக்கடவு, சொக்கனூர் செல்லும் வழியில் சிங்கையன்புதூர் அருகே, ரோட்டோரம் உள்ள மின் கம்பம் சேதமடைந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் படி உள்ளது. இதை மின்வாரியத்தினர் கவனித்து உடனடியாக மின்கம்பத்தை மாற்றியமைக்க வேண்டும்.
-- கதிர்வேல்: ரோடு படுமோசம் பொள்ளாச்சி, கோட்டூர் ரோட்டில் இருந்து ஜோதி நகர் செல்லும் வழியில் ஆங்காங்கே ரோடு சேதமடைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் அவதிப்படுவதுடன், அவ்வப்போது விபத்து ஏற்படுகிறது. இதைத் தவிர்க்க, ரோட்டை விரைவில் சீரமைக்க வேண்டும்.
- டேவிட்: வேகத்தடை அமைக்கணும்! பொள்ளாச்சி, மாப்பிள்ளைகவுண்டன்புதூர் -- ராமபட்டிணம் பிரிவு பகுதியில், அரசு பள்ளி அருகே ரோட்டில் வேகத்தடை இல்லாததால், இவ்வழியில் அதிக வேகமாக வாகனங்கள் செல்கிறது. இதனால், மாணவர்கள் ரோட்டை கடந்து பள்ளிக்கு செல்ல சிரமம் ஏற்படுகிறது. எனவே, மாணவர்கள் நலன் கருதி பள்ளி முன்பாக வேகத்தடை அமைக்க வேண்டும்.
-- உசேன்: மின்விளக்கு எரியல! பொள்ளாச்சி -- கோவை தேசிய நெடுஞ்சாலையில், தாமரைக்குளம் அருகே மையத்தடுப்பில் உள்ள மின்விளக்குகள் இரவு நேரத்தில் அவ்வப்போது எரியாததால் ரோட்டை கடக்கும் பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் மின்விளக்குகளை பராமரிக்க வேண்டும்.
- பாபு: ரோட்டில் மண் குவியல் பொள்ளாச்சி, ஆச்சிபட்டி அருகே வடிகால் வசதி இல்லாததால், மழை நீர் ரோட்டோரத்தில் உள்ள மண்ணுடன் கலந்து ரோட்டில் சென்றது. இதனால், அதிக அளவில் ரோட்டில் மண் தேங்கி கிடக்கிறது. வாகன ஓட்டுநர்கள் செல்ல சிரமம் ஏற்படுகிறது. மண் குவியலை உடனடியாக அகற்றம் செய்ய வேண்டும்.
-- ராஜா: பணியை விரைந்து முடிக்கணும் உடுமலை சின்ன வீரம்பட்டி அங்கன்வாடி மைய கட்டடத்தில் வர்ணங்கள் அடிக்கப்பட்டு குழந்தைகளை கவரும் வகையில் படங்கள் வரையும் பணி முழுமையடையாமல் உள்ளது. இப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கணேசன்: சுரங்கப்பாதை வேண்டும் உடுமலை புது பஸ் ஸ்டாண்ட் முதல் பழைய பஸ் ஸ்டாண்ட் வரை மக்கள் நடப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். அங்கு சுரங்கப்பாதை அமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- காமராஜ்: சிக்னல் அமைக்கணும் உடுமலை ஏரிப்பாளையம் ரோடு சந்திப்பு பகுதியில் போக்குவரத்து அதிகரித்து வருகிறது. இதனால், விபத்துகள் ஏற்படுகிறது. எனவே விபத்துகளை தவிர்க்க அப்பகுதியில் சிக்னல் அமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- முருகன்: தார் ரோடு போடணும் உடுமலை பெதப்பம்பட்டி ரோட்டில் நான்கு வழிச்சாலை சந்திப்பில் முறையாக தார் ரோடு போடாததால், விபத்துகள் அதிகரித்து வருகிறது. வாகன ஓட்டுனர்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, அங்கு தார்ரோடு போட நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சாமிநாதன்: நிழற்கூரை இல்லை உடுமலை, பொள்ளாச்சி தாலுகா எல்லையில் தேவனுார் புதுாரில் அமைந்துள்ளது. இங்கு இரு நகரங்களிலிருந்தும் டவுன்பஸ்கள் வந்து செல்கின்றன. ஆனால், இங்கு நிழற்கூரை இல்லாததால், பயணியர் மிகுந்து சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, அங்கு நிழற்கூரை அமைக்க ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கருப்பசாமி: இடையூறு வாகனங்கள் உடுமலை 100 அடி திட்டச்சாலை ரோட்டில் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள். இதனால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விதிமீறி வாகனங்கள் நிறுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மோகன்:

