/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூராட்சியை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்
/
பேரூராட்சியை கண்டித்து பா.ஜ., ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 12, 2025 10:57 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் பஸ் ஸ்டாண்டில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு பெரியநாயக்கன்பாளையம் நகர் மண்டல் தலைவர் லோகேஷ் ராம் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில், பா.ஜ., மாநில செயலாளர் நந்தகுமார், கோவை மாநகர், மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பா.ஜ.,வினர் கலந்து கொண்டனர். இதில், பொது மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முழுமையாக நிறைவேற்றி தராத பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

