/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வளர்ச்சி பணிகளை விரைவில் முடிக்க உத்தரவு
/
வளர்ச்சி பணிகளை விரைவில் முடிக்க உத்தரவு
ADDED : நவ 12, 2025 10:57 PM
அன்னுார்: அன்னுார் ஊராட்சி ஒன்றியத்தில், பல்வேறு திட்டங்களின் கீழ் இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. நேற்று மதியம் அன்னுாரில் கோவை மாவட்ட கூடுதல் கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாஹே ஆய்வில் ஈடுபட்டார்.
15 வது நிதி குழு மானியத்தில், 45 லட்சம் ரூபாய் செலவில், பச்சாபாளையம் ஊராட்சி, மோள பாளையத்தில் கட்டப்பட்டு வரும் துணை சுகாதார நிலைய கட்டிடத்தை பார்வையிட்டார்.
மசக்கவுண்டன் செட்டிபாளையம் ஊராட்சி, பொன்னே கவுண்டன் புதூரில் 17 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டிடத்தை ஆய்வு செய்தார்.
கணுவக்கரை ஊராட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 31 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி அலுவலகம் கட்டும் பணி, மூக்கனுாரில் ஏழு லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் கட்டும் பணி, என 11 பணிகளை ஆய்வு செய்தார்.
'பணிகளை விரைவில் முடிக்க வேண்டும். தினமும் வேலை அறிக்கை அனுப்ப வேண்டும்,' என அறிவுறுத்தினார்.

