/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அய்யப்பன் கோவிலில் உற்சவம்; பா.ஜ., மாநில தலைவர் தரிசனம்
/
அய்யப்பன் கோவிலில் உற்சவம்; பா.ஜ., மாநில தலைவர் தரிசனம்
அய்யப்பன் கோவிலில் உற்சவம்; பா.ஜ., மாநில தலைவர் தரிசனம்
அய்யப்பன் கோவிலில் உற்சவம்; பா.ஜ., மாநில தலைவர் தரிசனம்
ADDED : மார் 31, 2025 11:23 PM
கோவை; சித்தாபுதுார் அய்யப்பன் கோவிலின், 56வது ஆண்டு உற்சவ திருவிழாவும், அய்யப்ப சேவா சங்கத்தின், 70வது ஆண்டு விழாவும் நேற்று விமரிசையாக நடந்தது.
நேற்று காலை தாந்திரீக சடங்குகள் நடந்தன. தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், உற்சவபலியும் திருமஞ்சன அபிஷேகங்களும் நடந்தன.
மாலை 5:00 மணிக்கு உற்சவ சடங்குகளும், நிறைபறை சமர்ப்பித்தலும் நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் சுவாமி தரிசனம் செய்தார்.
முன்னதாக, காலையில் நடந்த கோவில் ஆண்டு விழாவில், பா.ஜ.,மாநில தலைவர் அண்ணாமலை சுவாமி தரிசனம் செய்தார். கோசாலையில் உள்ள மாடுகளுக்கு, கீரை வழங்கினார்.
கோவில் நிர்வாகிகள் கூறியதாவது:
ஆண்டுத்திருவிழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. வரும் புதன்கிழமை ஆறாட்டுத்திருவிழா நடக்கிறது. அப்போது அலங்கரிக்கப்பட்ட அய்யப்பசுவாமி, யானை மீது அமர்ந்து ஆறாட்டு திருவீதி உலா வருகிறார்.
கோவிலிலுள்ள அய்யப்பசுவாமி, ஸ்ரீ சக்ரத்தில் வீற்றிருக்கிறார். இதனால், தேவசைதன்யம் அதிகம் உள்ளதால் பக்தர்களின் வேண்டுகோள்கள், பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.

