/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பா.ஜ., மாநில தலைவர் வருகை: கட்சி நிர்வாகிகள் ஆலோசனை
/
பா.ஜ., மாநில தலைவர் வருகை: கட்சி நிர்வாகிகள் ஆலோசனை
பா.ஜ., மாநில தலைவர் வருகை: கட்சி நிர்வாகிகள் ஆலோசனை
பா.ஜ., மாநில தலைவர் வருகை: கட்சி நிர்வாகிகள் ஆலோசனை
ADDED : நவ 04, 2025 09:08 PM

சோமனூர்: அவிநாசியில், பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்கும் பொதுக்கூட்டம் இன்று நடக்கிறது. இதையொட்டி, சோமனூரில் பா.ஜ., சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
பா.ஜ., கூட்டுறவு பிரிவு மாநில தலைவர் மகா சுசீந்திரன் பங்கேற்று பேசுகையில், மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழகம் முழுக்க, 'தமிழகம் தலை நிமிர, தமிழனின் பயணம்' எனும் பிரசார பய ணம் மேற்கொண்டுள்ளார். மாநிலம் முழுக்க மக்கள் பலத்த ஆதரவு அளித்து வருகின்றனர். அவிநாசியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில், மாநில தலைவர் உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். சூலூர் தொகுதியில் இருந்து அதிக அளவில் தொண்டர்கள் பங்கேற்க வேண்டும், என்றார்.
மாவட்ட பொதுச்செயலாளர் கோபால்சாமி, கருமத்தம்பட்டி மண்டல தலைவர் பிரகாஷ், வடக்கு ஒன்றிய தலைவர் மகேந்திரன் மற்றும் மண்டல நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.