/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சாலை மறியல் செய்த விவசாயிகள் கைது
/
சாலை மறியல் செய்த விவசாயிகள் கைது
ADDED : நவ 04, 2025 09:08 PM

சூலூர்: சுல்தான்பேட்டை ஒன்றியம் பெரிய கம்மாளபட்டியை சேர்ந்தவர் வெங்கடேசன். தென்னை விவசாமி. இவர், செஞ்சேரிமலையில் துரைசாமி என்பவருக்கு சொந்தமான உரம் மற்றும் பூச்சி கொல்லி மருந்துக் கடையில், அவருடைய பரிந்துரையின் பேரில், சில மருந்துகளை வாங்கி, தென்னை மரங்களுக்கு இட்டதாக கூறப்படுகிறது. அந்த மருந்துகளால் மரங்கள் பாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதனால், பாதிப்புக்கு உள்ளான விவசாயி, கடை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என, வேளாண் அதிகாரிகள் மற்றும் கலெக்டரிடம் புகார் அளித்தனர். இரு மாதங்களாக எந்த நடவடிக்கையும் இல்லாததால், ஆவேசமடைந்த விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள், சுல்தான்பேட்டையில் உள்ள வேளாண் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாதிக்கப்பட்ட மரங்களுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும், கடை உரிமையை ரத்து செய்ய வேண்டும், என கோஷங்களை எழுப்பினர். அதிகாரிகள் தரப்பில் இருந்து யாரும் வராததால், ஆவேசமடைந்த விவசாயிகள், பொள்ளாச்சி ரோட்டில்சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

