ADDED : மார் 12, 2026 04:39 AM
அன்னுார்: நிர்வாக குழு கூட்டத்தில், அவிநாசி தொகுதியில் பா.ஜ., போட்டியிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பா.ஜ., அன்னுார் வடக்கு ஒன்றிய நிர்வாக குழு கூட்டம், ஒன்றிய தலைவர் ஆனந்தன் தலைமையில் நடந்தது. வக்கீல் பிரிவு மாவட்ட தலைவர் சிவகுமார் முன்னிலை வகித்தார். வரும் தேர்தலில், அவிநாசி தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் போட்டியிட வேண்டும் என மாநில தலைமைக்கு வேண்டுகோள் விடுக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
எதிர்க்கட்சிகளின் துாண்டுதலின் பேரில், சமூக விரோத கும்பல்கள், பா.ஜ., பெயரில் போலியான முகநுால் கணக்கு மற்றும் வாட்ஸ்-அப் குழுக்கள் உருவாக்கி, பா.ஜ., நிர்வாகிகளுக்கு எதிரான அவதுாறு கருத்துக்களை பரப்பி வருவதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதுபோன்ற சமூக விரோத கும்பல்கள் மீது மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
திருத்தி அமைக்கப்பட்ட ஓட்டு சாவடிகளின் அடிப்படையில், வடக்கு ஒன்றியம் முழுவதும் ஓட்டுச்சாவடி கமிட்டி மற்றும் கிளை கமிட்டிகள் அமைத்தல் உட்பட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பா.ஜ., ஒன்றிய பொதுச்செயலாளர் தங்கராஜ், துணைத்தலைவர்கள் ஜெயகிருஷ்ணன், லட்சுமண மூர்த்தி, ஒன்றிய செயலாளர் சவுந்தரராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
