/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரயில்வே ஸ்டேஷன் தூய்மை பணியில் பா.ஜ.வினர்
/
ரயில்வே ஸ்டேஷன் தூய்மை பணியில் பா.ஜ.வினர்
ADDED : செப் 17, 2025 09:55 PM

மேட்டுப்பாளையம்; பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு, பா.ஜ.,வினர் மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனை சுத்தம் செய்தனர்.
பிரதமர் மோடியின், 75வது பிறந்த நாளை முன்னிட்டு, பா.ஜ.,வினர் மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில், தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
நகர தலைவர் சரவணகுமார் தலைமையில், மாநில செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், மாவட்ட பொது செயலாளர் விக்னேஷ், மாவட்ட செயலாளர் உமா சங்கர், சாமிநாதன் உள்பட ஏராளமான பா.ஜ.,வினர் ரயில்வே ஸ்டேஷனிலும், தண்டவாளங்களிலும், பிளாட்பாரத்திலும், பயணிகள் வீசி சென்ற பிளாஸ்டிக் பாட்டில்கள், பாலிதீன் கவர்கள், பேப்பர் தட்டுகள் உள்பட குப்பைகளை சுத்தம் செய்தனர்.
அதன் பின்பு நமது ரயில் நிலையம் நமது சுகாதாரம் என்று கூறி அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.