/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உருக்குலைந்த ரோட்டை சீரமைக்க பா.ஜ.,வினர் நுாதன போராட்டம்
/
உருக்குலைந்த ரோட்டை சீரமைக்க பா.ஜ.,வினர் நுாதன போராட்டம்
உருக்குலைந்த ரோட்டை சீரமைக்க பா.ஜ.,வினர் நுாதன போராட்டம்
உருக்குலைந்த ரோட்டை சீரமைக்க பா.ஜ.,வினர் நுாதன போராட்டம்
ADDED : மார் 27, 2025 11:48 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட ராஜாமில் ரோடு, போதிய பராமரிப்பின்றி உள்ளதுடன், சேதமடைந்து குண்டும், குழியுமாக பெயர்ந்து காணப்படுகிறது. இந்த ரோட்டை சீரமைக்க வலியுறுத்தி, பொள்ளாச்சி நகர பா.ஜ.,வினர், வாழை மரக்கன்றுகளை நடும் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
பா.ஜ., நகர தலைவர் பரமகுரு தலைமையில், மாவட்ட பொதுச்செயலாளர் வக்கீல் துரை மற்றும் நிர்வாகிகள், ரோட்டை சீரமைக்க வலியுறுத்தி வாழை மரக்கன்றுகளை நட முயற்சித்தனர்.
அங்கு இருந்த போலீசார், 'வாழை மரக்கன்றுகளை நட அனுமதிக்க மாட்டோம்; நீங்கள், கோரிக்கையை சொல்லுங்கள்; நகராட்சியிடம் தெரிவிக்கப்படும்,' என தெரிவித்தனர்.
இதற்கு பா.ஜ.,வினர், 'மற்ற கட்சிகள் போராட்டம் செய்தால் அனுமதி அளிக்கப்படுகிறது. பா.ஜ., மக்கள் பிரச்னைக்காக போராடினால் கூட அனுமதி அளிக்காதது ஏன், என தெரியவில்லை. வாழை மரக்கன்றுகளை நட்டு போராட்டம், நகராட்சியின் கவனம் ஈர்க்கத்தான் நடத்தப்படுகிறது,' எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, ரோட்டில் வாழை மரக்கன்றுகளை நட முயற்சித்தவர்களை, தடுத்து நிறுத்தியதுடன், அவர்களை கைது செய்தனர்.
பா.ஜ., நகர செயலாளர் கூறுகையில், ''ராஜாமில்ரோட்டில், வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகின்றனர். இந்த ரோட்டை சீரமைக்க வேண்டும். மக்களிடம் வரியை வசூலித்த நிர்வாகம், ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

