ADDED : டிச 20, 2025 05:14 AM
அ நிறம் | அளவு
போத்தனூர்: பா.ஜ. தலைவர் நயினார் நாகேந்திரன், மாநிலம் முழுவதும் தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் எனும் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இதன் ஒரு பகுதியாக வரும், 29ல் கோவை வருகிறார். அவரை வரவேற்கும் விதமாக, மாநாடு நடத்த கோவை தெற்கு மாவட்ட பா.ஜ., திட்டமிட்டுள்ளது.
இதற்கான பணியை துவக்கும் வகையில், நேற்று காலை மலுமிச்சம்பட்டி நான்கு சாலை சந்திப்பு அருகே பூமி பூஜை, தெற்கு மாவட்ட தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடந்தது. மாநில அமைப்பு செயலாளர் கேசவ வினாயகம், பொது செயலாளர் முருகானந்தம், தெற்கு மாவட்ட முன்னாள் தலைவர் வசந்தராஜன் மற்றும் நிர்வாகிகள், கட்சியினர் பங்கேற்றனர்.
