/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பா.ஜ. நடத்திய செஸ் மாணவர்கள் அசத்தல்
/
பா.ஜ. நடத்திய செஸ் மாணவர்கள் அசத்தல்
ADDED : டிச 13, 2025 05:08 AM

கோவை: கோவை மாநகர் மாவட்ட பா.ஜ., விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு சார்பில், மாநில அளவிலான சதுரங்க போட்டிகள், இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் நடந்தன.
பா.ஜ.,விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் பிரனேஷ் தலைமை வகித்தார்.
கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வானதி சீனிவாசன் போட்டிகளை துவக்கி வைத்தனர். பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அலுவலர் மற்றும் பா.ஜ., விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் அனுஷா ரவி, சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் மணிகண்டன் உள்ளிட்டோர், நிகழ்வில் பங்கேற்றனர்.

