/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆளுங்கட்சியினரின் ஊழலை கண்டித்து காரசார விவாதம்! 9 அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்
/
ஆளுங்கட்சியினரின் ஊழலை கண்டித்து காரசார விவாதம்! 9 அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்
ஆளுங்கட்சியினரின் ஊழலை கண்டித்து காரசார விவாதம்! 9 அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்
ஆளுங்கட்சியினரின் ஊழலை கண்டித்து காரசார விவாதம்! 9 அ.தி.மு.க., கவுன்சிலர்கள் சஸ்பெண்ட்
UPDATED : டிச 13, 2025 08:05 AM
ADDED : டிச 13, 2025 05:08 AM

மேட்டுப்பாளையம், மேட்டுப்பாளையம் நகராட்சி அவசர கூட்டத்தில், ஆளுங்கட்சிக்கு எதிராக பேசியதாக, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஒன்பது பேரும், இரண்டு கூட்டத்துக்கு, சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சி அவசர கூட்டம், நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் தலைமையில் நடந்தது. நகராட்சி கமிஷனர் அமுதா, துணைத் தலைவர் அருள்வடிவு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
30 தீர்மானங்கள் மன்றத்தில் வைக்கப்பட்டன. பல தீர்மானங்கள் தொடர்பாக, அ.தி.மு.க., - தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே, கடும் வாதம் நடந்தது. இதில், 26வது தீர்மானமாக பஸ் ஸ்டாண்ட் கடைகள் ஏலம் விட்டது குறித்து விவாதம் செய்யப்பட்டது.
கடைகள் ஏலம் விட்டதில், பல முறைகேடுகள் நடந்துள்ளதாக, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பேசினர். இதற்கு தி.மு.க., கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இரு தரப்பினரிடையே, காரசார விவாதம் நடந்தது. முடிவில், கமிஷனரையும், ஊழல் நகராட்சியையும் கண்டிக்கிறோம் என, கோஷம் போட்டு அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அதை தொடர்ந்து, ஊழல் நடந்ததற்கான ஆதாரத்தை காண்பிக்க வேண்டும்; இல்லை என்றால் புகார் கூறிய, அ.தி.மு.க., கவுன்சிலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி, தி.மு.க., கவுன்சிலர்கள், நகராட்சி தலைவரை சூழ்ந்தனர். பின், வெளியே வந்து கோஷம் போட்டனர்.
நகராட்சி அலுவலகத்தில் பரபரப்பான நிலை ஏற்பட்டது.
இறுதியில், நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் மன்ற கூட்டத்தில் பேசுகையில், ''நகராட்சி கமிஷனர், தலைவர், கவுன்சிலர் ஆகியோரை அ.தி.மு.க., கவுன்சிலர்கள் அவதூறாக பேசினர். அதனால் அவர்கள் இரண்டு கூட்டத்துக்கு, சஸ்பெண்ட் செய்யப்படுகின்றனர், என்று அறிவித்தார்.

