UPDATED : நவ 29, 2026 07:36 PM
ADDED : நவ 29, 2026 07:36 PM

அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையத்தில் நடைபெற உள்ள யானைகள் புத்துணர்வு நல வாழ்வு முகாமுக்கு, எதிர்ப்பு தெரிவித்தும், முகாமை வேறு இடத்திற்கு மாற்றக் கோரியும், கருப்புக் கொடி போராட்டம் நடந்தது.
இதில் பவானி நதி நீர் மற்றும் நிலத்தடி நீர் பாதுகாப்பு குழு தலைவர் அரங்கசாமி, தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் வேணுகோபால் தலைமையில், மேட்டுப்பாளையம் அருகே மங்கலக்கரை புதூர், கிட்டாம்பாளையம், தேக்கம்பட்டி, நெல்லித்துறை, தொட்டதாசனுர் ஆகிய பகுதிகளில் உள்ள வீடுகள் முன்பு, கருப்பு கொடிகளை கட்டியும், ஊர்வலமாக சென்று மக்களிடையே, முகாமுக்கு எதிர்ப்பு தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
