/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தோட்டத்து கிணறுகளில் கருப்பு நிறத்தில் தண்ணீர்
/
தோட்டத்து கிணறுகளில் கருப்பு நிறத்தில் தண்ணீர்
ADDED : ஜன 02, 2025 05:43 AM
அன்னுார்; அன்னுாரில் 119 ஏக்கர் பரப்பளவு உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான குளம் உள்ளது. அந்த குளத்தின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதியில் கழிவுநீர் குளத்தில் கலக்கிறது.
இது குறித்து ஓதிமலை ரோடு பகுதி விவசாயிகள் கூறுகையில், 'மேட்டுப்பாளையம் சாலையில் இருந்தும், வார சந்தை மற்றும் பஸ் ஸ்டாண்டில் இருந்தும் சாக்கடை கழிவு நீரை குழாய் அமைத்து குளத்தில் விடுகின்றனர்.
குளத்தை ஒட்டி ஓதிமலை சாலையில் உள்ள 30 ஏக்கர் விவசாயத் தோட்ட கிணறுகளில் கழிவுநீர் தேங்கியுள்ளது. பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச மோட்டார் மூலம் கிணற்றிலிருந்து தண்ணீரை பம்பிங் செய்தால் துர்நாற்றத்துடன் கழிவு நீர் வருகிறது. இதனால் இந்த பகுதியில் விவசாயமே செய்ய முடியாத நிலை உள்ளது' என்றனர்.

