/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிளேக் மாரியம்மன் கோவில் இடம் அளவீடு
/
பிளேக் மாரியம்மன் கோவில் இடம் அளவீடு
ADDED : டிச 24, 2024 07:00 AM

மேட்டுப்பாளையம்; காரமடை பிளேக் மாரியம்மன் கோவில், தனி நபர் கட்டடம் இடங்களில் காரமடை வருவாய் துறையினர் நில அளவையர்களை கொண்டு இடத்தை அளந்தனர்.
காரமடை நகராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிளேக் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதியில், சாலையின் ஓரத்தில் ஒதுக்கு புறமாக உள்ள, இந்த கோவிலின் சுற்றுசுவரின் ஒரு பகுதி நெடுஞ்சாலைத்துறை பகுதியில் அமைந்துள்ளது. இதனிடையே இக்கோவிலின் அருகில் தனி நபருக்கு சொந்தமான கட்டடம் ஒன்று உள்ளது. இந்நிலையில் கோவிலின் பெரும்பகுதியை நெடுஞ்சாலைத்துறையினர் இடிக்க சதி செய்வதாக கூறி கோவிலின் சுற்றுசுவரை இடிக்க பலரும் தெரிவித்தனர். அதே போல் தனியார் கட்டடத்திலும் விதிமீறில்கள் உள்ளது.
இதுதொடர்பாக காரமடை நகராட்சி மற்றும் வருவாய் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இருதரப்பினர் இடையே பிரச்னை ஏற்பட்டது. இப்பிரச்னை தொடர்பாக மேட்டுப்பாளையம் தாசில்தார் வாசுவேதன் தலைமையில் அண்மையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
இதைதொடர்ந்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமாரிடமும் கோவில் நிர்வாகத்தினர் மனு அளித்தனர். இதை தொடர்ந்து நேற்று காரமடை வருவாய் ஆய்வாளர் ரேணுகாதேவி தலைமையில் வருவாய் துறையினர் கோவிலுக்கு சொந்தமான இடம், தனியார் கட்டடம் இடம் ஆகியவற்றை நில அளவையர்களை கொண்டு, இருதரப்பினர் முன்னிலையில் அளக்கப்பட்டது.
இதுகுறித்து, காரமடை வருவாய் ஆய்வாளர் ரேணுகா தேவி கூறுகையில், மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நில அளவீடு செய்யப்பட்டது தொடர்பாக அறிக்கை அளிக்கப்படும். அதன் பின் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.--