sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 31, 2026 ,பங்குனி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கற்களால் சாக்கடை கால்வாய் அடைப்பு 60வது வார்டில் ஏன் இந்த அட்டூழியம்

/

 கற்களால் சாக்கடை கால்வாய் அடைப்பு 60வது வார்டில் ஏன் இந்த அட்டூழியம்

 கற்களால் சாக்கடை கால்வாய் அடைப்பு 60வது வார்டில் ஏன் இந்த அட்டூழியம்

 கற்களால் சாக்கடை கால்வாய் அடைப்பு 60வது வார்டில் ஏன் இந்த அட்டூழியம்


UPDATED : ஜன 12, 2026 06:00 AM

ADDED : ஜன 12, 2026 05:57 AM

Google News

UPDATED : ஜன 12, 2026 06:00 AM ADDED : ஜன 12, 2026 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிதறிக்கிடக்கும் குப்பை

கணபதி, ராமகிருஷ்ணபுரம், 20வது வார்டு, சாலையோரத்தில் பெருமளவு குப்பை குவிந்துள்ளது. திறந்தவெளியில் சிலர் குப்பையை தொடர்ந்து இப்பகுதியில் வீசிச்செல்கின்றனர். பாதி சாலை வரை சிதறிக்கிடக்கும் குப்பையை அகற்றுவதுடன், மீண்டும் கொட்டாமல் இருக்க நடவடிக்கை வேண்டும்.

- சந்திரா:

சாக்கடையில் கருங்கற்கள் உப்பிலிபாளையம், 60வது வார்டு, மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள சாக்கடை கால்வாயில் சிலர் பெரிய கருங்கற்களை கொட்டியுள்ளனர். இதனால் கழிவுநீர் அடைத்து கடும் துர்நாற்றம் வீசுகிறது.



- சித்தார்த்:

காலை, மாலை நெருக்கடி

மரப்பாலம் பாலம் வேலை நடைபெறுவதால், பாலக்காடு ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள் மற்றும் பாலக்காடு சாலை வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தும் மதுக்கரை ரோடு வழியாக செல்கின்றன. தினமும் காலை, மாலை வேளையிலும் கடும் போக்குவரத்துநெருக்கடி ஏற்படுகிறது.

- கார்த்திக்:

விளையாட்டு உபகரணங்கள் சேதம்

வீரகேரளம், பூசாரிபாளையம், காந்திபார்க்கில் இருந்து வேடப்பட்டி செல்லும் சாலையில் உள்ள சிறுவர் பூங்கா போதிய பராமரிப்பின்றி உள்ளது. விளையாட்டு உபகரணங்கள் சேதமடைந்து உள்ளன. பூங்காவில் உள்ள பெரும்பாலான தெருவிளக்குகளும் எரியாமல் உள்ளது.

- பாரத்:

கடும் துர்நாற்றம்

துடியலுார், ஆஞ்சநேயர் கோவில் அருகில் உள்ள ராஜ வாய்க்காலில், தொடர்ந்து கழிவுநீர் வெளியேற்றப்படுகிறது. தேங்கி நிற்கும் கழிவுநீரால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. மழைநீர் வடிகாலில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்.

- ஸ்ரீதர்:

சறுக்கும் மணல் சுந்தராபுரம், மதுக்கரை ரோட்டில் சமீபத்தில் பெய்த மழையில் சாலையோரம் அதிகளவு மணல் குவிந்துள்ளது. இருசக்கர வாகனஓட்டிகள் சாலையோரம் செல்லும்போது சறுக்கி விழுகின்றனர். குவிந்துள்ள மணலை அகற்ற வேண்டும்.

- தங்கவேல்:

குப்பை மேடான பேருந்துநிலையம்

ஒண்டிப்புதுார், எஸ்.எம்.எஸ்.லே-அவுட் பகுதியில் பேருந்து நிலையம் சுத்தமாக பராமரிக்கப்படுவதில்லை. பேருந்து நிலைய வளாகம் முழுவதும் ஆங்காங்கே குப்பை குவிந்துள்ளது. குப்பையை அகற்ற வேண்டும்.

- பழனிச்சாமி:

சாக்கடையில் மின்கம்பம்

தொண்டாமுத்துார் ரோடு, பூசாரிபாளையம், 74வது வார்டில் சாக்கடை கால்வாய் நடுவே மின்கம்பம் உள்ளது. கழிவுநீர் செல்லும்போது அரித்து கம்பத்தின் அடிப்பகுதி சேதமடையக்கூடும். சாக்கடை கால்வாயில் நடுவே ஆபத்தான முறையில் அமைந்துள்ள மின்கம்பங்களை இடமாற்ற வேண்டும்.

- ராபர்ட்:

இருக்கை இல்லை

செல்வபுரம் மற்றும் செட்டிவீதியில் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பயணிகள் உட்கார வசதியாக பேருந்து நிலையத்தில் இருக்கைகள் அமைக்கப்படவில்லை. பயணிகள் நின்றபடியே காத்திருக்க வேண்டியுள்ளது.

- பாலமுருகன்:

வளைவில் ஆபத்து மத்திய மண்டலம், 83வது வார்டு, பழைய போஸ்ட் ஆபீஸ் ரோட்டில், ஜி.டி.பள்ளி திருப்பம் அருகே சாக்கடை சிலேப் பெயர்ந்துள்ளது. குழந்தைகள் உட்பட இவ்வழியே நடந்து செல்பவர்களுக்கு இடையூறாக உள்ளது. வாகனஓட்டிகளுக்கும் ஆபத்தாக உள்ளது.

- உதயகுமார்:






      Dinamalar
      Follow us