ADDED : ஜூன் 20, 2025 01:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின், 36-வது நிறுவன தினத்தை முன்னிட்டு கோவை பேக் ஆபீஸ் மற்றும் கிளஸ்டர் அலுவலகம் சார்பில் ஜி.கே.என்.எம். மருத்துவமனையுடன் இணைந்து, ரத்த தான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.
எல்.ஐ.சி.ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கோவை பேக் ஆபீஸ் வளாகத்தில் நேற்று ரத்த தானம் முகாம் நடத்தப்பட்டது. இந்நிறுவன அலுவலர்கள் பங்கேற்று ரத்த தானம் அளித்தனர். இந்நிகழ்வில்,எல்.ஐ.சி., ஹவுசிங் பைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் கோவை வட்டார மேலாளர் ராஜீவ் நாயர், அலுவலர்கள் மற்றும் ஜி.கே.என்.எம். மருத்துவமனை செவிலியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.