/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மருத்துவமனையில் ரத்த தான முகாம்
/
மருத்துவமனையில் ரத்த தான முகாம்
ADDED : அக் 15, 2024 11:56 PM
மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் மனிதநேய பண்பாளர் குழுவும், சுப மருத்துவமனையும் இணைந்து, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு ரத்தம் வழங்க, ரத்ததான முகாமை நடத்தியது. நிகழ்ச்சிக்கு சுப மருத்துவமனை தலைமை டாக்டர் மகேஸ்வரன் தலைமை வகித்தார்.
கலா மகேஸ்வரன் முகாமை துவக்கி வைத்தார். அரசு மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் ராம் தீபிகா தலைமையில், மருத்துவ குழுவினர் ரத்தம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். மருத்துவ மாணவி லாகினி, ரத்த தானம் செய்து, முகாமை துவக்கி வைத்தார். மனிதநேய பண்பாளர்கள் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வன், ஒருங்கிணைப்பாளர் யுவராஜ் உட்பட பலர் ரத்தம் வழங்கினர். அரசு போக்குவரத்து கழக நடத்துநர் அறிவழகன், 36 வது முறையாக ரத்த தானம் செய்தார். நாராயணமூர்த்தி நன்றி கூறினார்.