/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க., சார்பில் ரத்ததான முகாம்
/
தி.மு.க., சார்பில் ரத்ததான முகாம்
ADDED : நவ 25, 2024 10:34 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், தி.மு.க.,வினர், பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, பொள்ளாச்சி, தலைமை அரசு மருத்துவமனையில், கோவை தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது. தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரிகார்த்திகேயன் தலைமை வகித்தார். முகாமை, சட்ட திட்ட திருத்தக் குழு உறுப்பினர் செல்வராஜ் துவக்கி வைத்தார். முகாமில், 65 பேர் பங்கேற்று, ரத்ததானம் செய்தனர்.