நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் சங்கம் சார்பில், மறைந்த பொறியாளர்களின் நினைவாக பத்தாம் ஆண்டு ரத்த தான முகாம் நடந்தது.
கோவை மண்டலம் பொறியாளர் சங்கத்தின் சார்பாக, 52 பேர் பங்கேற்று டாடாபாத் மின்வாரிய அலுவலகத்தில் ரத்த தானம் செய்தனர். முகாமை, மண்டல தலைமை பொறியாளர் சுரேஷ்குமார் துவக்கிவைத்தார்.
அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லுாரி சார்பில் ரத்த வங்கி டாக்டர் உமா மகேஸ்வரி ரத்தங்களை சேகரித்துடன் ரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்வில், மேற்பார்வை பொறியாளர்கள் குணவர்த்தினி, சதீஷ்குமார், சுப்பிரமணி, சாந்தநாயகி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நிகழ்வின் முடிவில், ரத்த தானம் செய்தவர்களுக்கு கவுரவ சான்றிதழ் வழங்கப்பட்டது.

