/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரத்த சர்க்கரை அளவு கண்டறியும் முகாம்
/
ரத்த சர்க்கரை அளவு கண்டறியும் முகாம்
ADDED : நவ 17, 2025 01:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்: உலக சர்க்கரை நோய் தினம் முன்னிட்டு, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட் லயன்ஸ் கிளப் சார்பில், ரத்தத்தில் சர்க்கரை அளவு கண்டறியும் முகாம், நேற்று காலை, சுந்தராபுரம், மதுக்கரை மார்க்கெட் சாலையில் நடந்தது.
முகாமை, கிளப் தலைவர் துரைசாமி துவக்கி வைத்தார். ஆர்.வி. எஸ். கல்லூரி டாக்டர்கள் (பயிற்சி) அனகேஷ், ஸ்ரீஜில் தலைமையிலான குழுவினர், ரத்த சர்க்கரை அளவை கண்டறிந்தனர்.
தொடர்ந்து மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது.
காலை, 8:00 முதல், 11:00 மணி வரை நடந்த முகாமில், 150 பேர் பயனடைந்தனர். லயன்ஸ் கிளப் செயலாளர் தனபால், பொருளாளர் பெரியசாமி மற்றும் பெரியசாமி, அருளானந்தம், சந்திரசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

