/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அறங்காவலர் குழுவினர் பொறுப்பேற்பு
/
அறங்காவலர் குழுவினர் பொறுப்பேற்பு
ADDED : மார் 13, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கருமத்தம்பட்டி:விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக சாந்தா சின்னசாமியும், உறுப்பினர்களாக தங்கராஜ், ஜெயப்பிரியா, பொன்னுசாமி, முருகன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். போட்டியின்றி ஒருமனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சின்னசாமி மற்றும் உறுப்பினர்கள் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.
அவர்களுக்கு,கோவை வடக்கு மாவட்ட காங்.,கமிட்டி தலைவர் மனோகரன், கருமத்தம்பட்டி நகராட்சி தலைவர் மனோகரன், காங்.,கட்சி மாநில செயலாளர் கணேசமூர்த்தி, முன்னாள் ஒன்றிய செயலாளர் பிரஸ் மணி, கிட்டாம்பாளையம் ஊராட்சி தலைவர் சந்திரசேகர் மற்றும் கவுன்சிலர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

