/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பாபி செம்மனுார் ஜூவல்லர்ஸ் புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் திறப்பு
/
பாபி செம்மனுார் ஜூவல்லர்ஸ் புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் திறப்பு
பாபி செம்மனுார் ஜூவல்லர்ஸ் புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் திறப்பு
பாபி செம்மனுார் ஜூவல்லர்ஸ் புதுப்பிக்கப்பட்ட ஷோரூம் திறப்பு
ADDED : ஜன 08, 2025 11:34 PM

கோவை; கோவை பெரிய கடைவீதியில், புதுப்பிக்கப்பட்ட பாபி செம்மனுார் இன்டர்நேஷனல் ஜூவல்லர்ஸ் ஷோரூமை, நடிகை ஹன்சிகா மோத்வானி, நேற்று திறந்து வைத்தார்.
திறப்பு விழாவில் துணை மேயர் வெற்றிச்செல்வன், தமிழ்நாடு ஜுவல்லர்ஸ் கூட்டமைப்பு மற்றும் கோயம்புத்துார் ஜுவல்லர்ஸ் கூட்டமைப்பின் தலைவர் சபரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாபி செம்மனூர் ஜூவல்லர்ஸ் இயக்குனர் சாம் சிபின் கூறுகையில், ''ஷோரூமில் உலகத்தரத்திலான வைர ஆபரணங்கள், ஹெச்.யூ.ஐ.டி., 916 தங்க நகைகளின் விரிவான கலெக் ஷன் விற்பனைக்கு உள்ளது. வைர ஆபரணங்களை வாங்கும்போது தங்க மோதிரங்கள், ஐபோன்கள் மற்றும் பல பரிசுகள் வழங்கப்படுகின்றன. ரூ.1 லட்சத்துக்கும் அதிகமான மதிப்புள்ள 'அன்கட்' வைரத்தை வாங்கினால், தங்க நாணயங்கள் இலவசம். வாங்கும் ஒவ்வொரு ஆபரணத்திற்கும் பரிசுகள் உண்டு. ஷோரூம் திறப்புவிழாவை முன்னிட்டு, கோவையை சேர்ந்த சுமார், 40 வசதியற்ற ஏழைகளுக்கு, பேன்ஸ் அறக்கட்டளை மூலம் நிதி உதவி வழங்கப்பட்டது,'' என்றார்.