ADDED : ஏப் 02, 2026 06:57 PM
பெ.நா.பாளையம்: துடியலுார் அருகேயுள்ள இன்ஜினியரிங் கல்லுாரிக்கு, நேற்று மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
துடியலுார் அருகே வட்டமலைபாளையத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிக்கு, நேற்று காலை மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. கல்லுாரி நிர்வாகத்தினர், துடியலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் தவசியப்பன் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன், கல்லுாரி வளாகம் முழுவதும் சோதனை நடத்தினர். முடிவில், வதந்தி என தெரியவந்தது.
நேற்றுமுன்தினம், துடியலுார் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சலில் வந்த தகவலையடுத்து, அங்கும் சோதனை நடத்தியதில் புரளி என தெரியவந்தது. துடியலுார் பகுதியில் அடுத்தடுத்து இரு இடங்களில், வெடிகுண்டு இருப்பதாக மின்னஞ்சலில் வந்த புகார், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சைபர் க்ரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
