/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல்
/
விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல்
ADDED : அக் 24, 2024 11:38 PM

கோவை: மும்பை மற்றும் டில்லியில் இருந்து கோவை வரும் விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் வந்தது.
கோவையில் கடந்த சில நாட்களாக பள்ளி, கல்லுாரி, மருத்துவமனை, ஓட்டல்கள் மற்றும் விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக இ-மெயில் வாயிலாக மிரட்டல்கள் வருகின்றன.
இந்நிலையில், நேற்று, பல்வேறு நகரங்களுக்கு செல்லும் 'விஸ்தாரா' விமானத்தில் குண்டு இருப்பதாக, 'எக்ஸ்' தளத்தில் மிரட்டல் பதிவு செய்யப்பட்டிருந்தது.
அதில், மும்பை மற்றும் டில்லியில் இருந்து கோவை வரும் விஸ்தாரா விமான எண்களும் குறிப்பிடப்பட்டிருந்தது.
மிரட்டலையடுத்து, விமானங்களில் சோதனை செய்யப்பட்டு, சந்தேகப்படும்படியான பொருட்கள் எதும் இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

