/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஆக 20, 2025 09:41 PM
கோவை; கோவை விமான நிலைய இயக்குனரின் இ-மெயில் முகவரிக்கு, நேற்று முன்தினம் இரவு, 11:30 மணிக்கு ஒரு 'மெசேஜ்' வந்தது. அதில், 'நான் ஒரு பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவன். உங்கள் விமான நிலையத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அது, எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உஷாரான விமான நிலைய அதிகாரிகள், துணை ராணுவத்தினர், பீளமேடு போலீசார் மற்றும், மத்திய தொழிலக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் மாநகர வெடிகுண்டு தடுப்புப் பிரிவு போலீசார் துப்பறியும் மோப்ப நாய், வெடிகுண்டு கண்டறியம் கருவி ஆகியவற்றுடன் சோதனை நடத்தினர்.
மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் சோதனை நடத்தினர். சோதனையில் எதுவும் கண்டறியப்படவில்லை; புரளி எனத் தெரிந்தது. மிரட்டல் இ-மெயில் அனுப்பியவர் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.
கோவை விமான நிலையம் தவிர, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள விமான நிலையங்களுக்கும் இதேபோல் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அதனால், விமான நிலையத்தில் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர்.