/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கலெக்டர் ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல்
/
கலெக்டர் ஆபீசுக்கு வெடிகுண்டு மிரட்டல்
ADDED : ஆக 26, 2025 10:55 PM
கோவை; கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக இ-மெயில் முகவரிக்கு, நேற்று காலை ஒரு மெசேஜ் வந்தது. அதில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. கலெக்டரின் நேர்முக உதவியாளர் நிறைமதி, ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். மோப்ப நாயுடன் வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர்.
அனைத்து பகுதிகளிலும், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தீவிர சோதனை மேற்கொண்டனர். வெடிகுண்டு இல்லை; தவறான தகவல் என தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர், போலியான இ-மெயில் ஐ.டி., உருவாக்கி மிரட்டல் விடுத்திருப்பது கண்டறியப்பட்டது. இ-மெயில் அனுப்பியவரை கண்டறிய இணையவழி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.