/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொம்மியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
/
பொம்மியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 08, 2025 10:26 PM

பெ.நா.பாளையம்; பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கோவனுாரில் பொம்மியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
கும்பாபிஷேக விழா கடந்த, 6ம் தேதி மகா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து, மகா தீபாராதனை, மங்கள இசை, வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தன. நேற்று முன்தினம் கோவனுார் பஸ் நிலையம், விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து வருதல் நிகழ்ச்சி நடந்தது. மங்கள பூஜை, காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம், முதல் கால யாக பூஜை கள் நடந்தன.
நேற்று காலை இரண்டாம் கால யாக பூஜை தொடங்கியது. பல்வேறு நதிகளில் இருந்து சேகரிக்கப்பட்ட தீர்த்த குடங்கள், கோவிலை சுற்றி வலம் வந்த பின்பு, பொம்மியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.