/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தைகளை பாதிக்கும் ரத்தப்புற்று நோய்க்கு எலும்பு மஜ்ஜை சிகிச்சை வாயிலாக தீர்வு
/
குழந்தைகளை பாதிக்கும் ரத்தப்புற்று நோய்க்கு எலும்பு மஜ்ஜை சிகிச்சை வாயிலாக தீர்வு
குழந்தைகளை பாதிக்கும் ரத்தப்புற்று நோய்க்கு எலும்பு மஜ்ஜை சிகிச்சை வாயிலாக தீர்வு
குழந்தைகளை பாதிக்கும் ரத்தப்புற்று நோய்க்கு எலும்பு மஜ்ஜை சிகிச்சை வாயிலாக தீர்வு
ADDED : ஜன 19, 2024 04:15 AM

'ரத்தப்புற்றுநோயை, ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால், குணப்படுத்தி விடலாம்,' என்கிறார், கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையின், குழந்தைகள் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் ருமேஷ் சந்தர்.
அவர் கூறியதாவது:
புற்றுநோய் என்பது பெரியவர்களுக்கு மட்டுமல்ல, குழந்தைகளுக்கும் ஏற்படலாம். இந்தியாவில் ஆண்டுதோறும் 50 ஆயிரம் குழந்தைகளுக்கு புற்றுநோய் கண்டறியப்படுகிறது. ரத்த சோகை, ஈறுகளில் இரத்தம் கசிதல், தீராத காய்ச்சல், வயிற்று வீக்கம், எலும்புகளில் வலி மற்றும் நெறிக்கட்டி வீக்கம் போன்றவை இதன் அறிகுறிகள். இதை 'கீமோதெரபி' சிகிச்சை வாயிலாக முற்றிலும் குணப்படுத்தலாம்.
தவிர, எலும்பு மஜ்ஜை மாற்றம் வாயிலாகவும் ரத்தப் புற்றுநோயை குணப்படுத்தலாம். அதாவது, சிகிச்சை பலனின்றி மீண்டும் வந்த ரத்தப் புற்றுநோய்க்கு கீமோதெரபி மற்றும் இம்யுனோதெரபி மருந்துகள் செலுத்திய பின், நோய் வாய்ப்பட்ட எலும்பு மஜ்ஜையை அழித்து, வேறு ஒருவரின் ஆரோக்கியமான எலும்பு மஜ்ஜையை செலுத்துவதன் வாயிலாக, குழந்தைகளை ரத்தப் புற்றுநோயிலிருந்து குணப்படுத்த முடியும்.
ரத்தப் புற்றுநோய் மட்டுமன்றி, தலசீமியா, சிக்கில் செல் அனீமியா, மரபணு ரீதியாக வரும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்றவற்றையும் எலும்பு மஜ்ஜை மாற்றத்தால் குணப்படுத்த முடியும்.
மூளையில் வரும் கட்டிகள், வயிற்றுப்பகுதி புற்றுநோய், நெறிக்கட்டி புற்றுநோய், தசை மற்றும் எலும்பு புற்றுநோய்கள் உட்பட பிற வகை புற்றுநோய்களை, கீமோதெரபி, கதிர்வீச்சு மற்றும் அறுவை சிகிச்சை வாயிலாக குணப்படுத்தலாம்.
வெளிநாடுகள், பெருநகரங்களில் மட்டுமே கிடைத்து வந்த இவ்வகை சிகிச்சைகள், தற்போது கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையிலும் அளிக்கப்படுகிறது. எந்த வகை புற்றுநோய் என்றாலும், அதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தகுந்த சிகிச்சை மேற்கொள்வது அவசியம். இது, குழந்தைகளின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்கவும் விரைவில் அவர்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பவும் பெரிதும் உதவும்.
விபரங்களுக்கு, 73393 33485 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.

