/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாநகராட்சி பள்ளி மாணவியர் 70 பேருக்கு புத்தகப் பைகள்
/
மாநகராட்சி பள்ளி மாணவியர் 70 பேருக்கு புத்தகப் பைகள்
மாநகராட்சி பள்ளி மாணவியர் 70 பேருக்கு புத்தகப் பைகள்
மாநகராட்சி பள்ளி மாணவியர் 70 பேருக்கு புத்தகப் பைகள்
ADDED : ஜூன் 27, 2025 11:12 PM

கோவை; தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம் சார்பில், மாநகராட்சி பள்ளி மாணவியர் 70 பேருக்கு, புத்தகப் பைகள் வழங்கப்பட்டன.
தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கம், கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் மகளிருக்கான முதல் மாநாட்டை, சில வாரங்களுக்கு முன், கோவையில் நடத்தியது. தமிழகத்திலிருந்து 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதன் தாய் சங்கமான, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின், 80வது துவக்க தினத்தை முன்னிட்டு, அரசு பள்ளியில் பயிலும் 80 மாணவியருக்கு, புத்தகப் பைகள் வழங்க முடிவு செய்யப்பட்டு, அன்று, கோவை ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பள்ளி மாணவியர் 10 பேருக்கு வழங்கப்பட்டன. மீதமுள்ள 70 பேருக்கு, நேற்று புத்தகப்பைகள் வழங்கப்பட்டன.
இதில், கோவை மாவட்ட வங்கி ஊழியர் சங்க தலைவர் பாட்சா, பொது செயலாளர் சையது இப்ராஹிம், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க கவுரவ தலைவர் ராஜன், தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க தலைவர் வடிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.