/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சொக்கம்பாளையத்தில் புத்தகம் வழங்கும் விழா
/
சொக்கம்பாளையத்தில் புத்தகம் வழங்கும் விழா
ADDED : ஜன 19, 2026 05:28 AM
அன்னூர்: சொக்கம்பாளையத்தில் நூலகத்திற்கு புத்தகங்கள் வழங்கும் விழா மற்றும் மரக்கன்று நடும் விழா நடந்தது.
சொக்கம்பாளையத்தில், மாற்றம் கல்வி மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்திற்கு ஆரோக்கியம், பொது அறிவு மற்றும் சட்டம் சம்பந்தமான புத்தகங்கள் வழங்கும் விழா நடந்தது.
பசுமை தேசம் அமைப்பின் தலைவர் ராஜேந்திரன் புத்தகங்களை வழங்கி பேசுகையில், மரங்கள் நாட்டின் உயிர் நாடி. ஒவ்வொருவரும் ஆண்டுக்கு ஒரு மரக்கன்றாவது நட்டு பராமரிக்க வேண்டும். வீடுகளில் மாடித்தோட்டம் அமைக்க வேண்டும்.
மூலிகைச் செடிகளால் நாம் மருத்துவமனைக்கு செல்ல தேவை இருக்காது. ரத்த தானம் செய்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இயற்கை முறையில் உடல் ஆரோக்கியத்தை பேண வேண்டும்,'' என்றார். மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடந்தது. பசுமை பூமி மற்றும் அன்னை தெரசா நண்பர்கள் அமைப்பு சார்பில், ஜோதி குமார், பொறியாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாகம்மாள் குப்புசாமி நினைவு மாற்றம் கல்வி மைய ஆசிரியர்கள், மாணவர்கள் நன்றி தெரிவித்தனர்.

