ADDED : ஜன 19, 2026 05:28 AM
அ நிறம் | அளவு
மேட்டுப்பாளையம்: பொங்கல் விடுமுறையை கொண்டாட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளாவில் இருந்தும் மேட்டுப்பாளையம் வழியாக ஊட்டி, குன்னூர், கோத்திரி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் படையெடுத்தனர்.
நேற்று ஊர் திரும்பினர். இதனால் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றுப்பாலம், நகர் பகுதி, கோவை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெரிசலை சீர்படுத்தும் பணியில் மேட்டுப்பாளையம் போலீசார் ஈடுபட்டனர்.
மேட்டுப்பாளையம் பகுதிக்கு புறநகர் சாலை அமைக்கப்படாததே இந்த நெரிசலுக்கு காரணம்.---
