நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் கோவை நேரு ஸ்டேடியத்தில் செயல்பட்டு வருகிறது. குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தேசிய புத்தகக் கண்காட்சி இன்று துவங்குகிறது; வரும், 30 ம் தேதி நிறைவடைகிறது.
இக்கண்காட்சியில், வாசகர்கள் புத்தகம் வாங்கும் போது, 10 - 30 சதவீதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது. புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கலை, அறிவியல், பண்பாடு, வரலாறு, திறனாய்வு, அரசியல், அறிவியல், வேளாண், மருத்துவம், கல்வியியல் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற உள்ளன.