/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நுாலக வார விழாவில் புத்தக கண்காட்சி
/
நுாலக வார விழாவில் புத்தக கண்காட்சி
ADDED : நவ 24, 2024 11:10 PM

பொள்ளாச்சி;
ஆனைமலை கிளை நுாலகத்தில் நடந்த புத்தகக் கண்காட்சியில் அரசு பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.
ஆனைமலை கிளை நுாலகம் வாயிலாக, தேசிய நுாலக வார விழா கொண்டாடப்படுகிறது. நுாலக வளாகத்தில், புத்தகக் கண்காட்சி நடத்தப்பட்டது. வாசகர் வட்டத் தலைவர் ராம்குமார், தலைமை வகித்தார்.
முன்னதாக, நுாலகர் மீனாகுமாரி வரவேற்றார். பேரூராட்சி தலைவர் கலைச்செல்வி, கண்காட்சியைத் துவக்கி வைத்தார். நுாலகங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி, பொழுதுபோக்கு, தகவல் தேடல், சமூக சேவை, மின்னணு வளங்கள், ஆராய்ச்சி உதவி உள்ளிட்ட வகைகளில் நுாலகங்கள் பயன்பாடு உள்ளது. புத்தகத்தை மேலிருந்து கீழ் நோக்கி படிக்கையில், அவரவரின் வாழ்க்கை கீழிருந்து மேல்நோக்கிச் செல்லும், என, மாணவர்களிடம் விளக்கப்பட்டது.
அனைவரும் 'நுாலகம் செல்வோம், வித்தகம் படைப்போம்' என உறுதி மொழி ஏற்றனர். பேரூராட்சி துணைத் தலைவர் ஜாபர்அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* இதேபோல, சூளேஸ்வரன்பட்டி கிளை நுாலகத்தில் நடந்த நுாலக வார விழாவில், புத்தகக் கண்காட்சி இடம்பெற்றது. உறுப்பினர் பொன்னுசாமி, உறுப்பினர் தொகையை செலுத்தி, 20 மாணவர்களை புதிய உறுப்பினராக சேர்க்க உதவினார்.
* வால்பாறை நுாலகத்தில் நடந்த, தேசிய நுாலக வார விழாவில், பள்ளி மாணவ, மாணவியருக்கு கட்டுரை, கவிதை, பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வால்பாறையில் உள்ள பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவில், நுாலகர் தனபாலன் தலைமை வகித்தார். உதவி நுாலகர் வேலுச்சாமி வரவேற்றார். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
விழாவில், வாசகர் வட்ட உறுப்பினர்கள், ஆசிரியர்கள், நுாலக பணியாளர்கள் சின்னசாமி, சிங்கராஜ் கலந்து கொண்டனர். வாசகர் வட்டத்தை சேர்ந்த வினு, மாணவர்களுக்கான பரிசுகளை அன்பளிப்பாக வழங்கினார்.