/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இலக்கிய வட்டத்தில் நுால் அறிமுக விழா
/
இலக்கிய வட்டத்தில் நுால் அறிமுக விழா
ADDED : டிச 19, 2024 11:37 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி இலக்கிய வட்டத்தின், இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி லயன்ஸ் கிளப் கட்டடத்தில் நடந்தது. அமைப்பின் தலைவர் அம்சப்ரியா தலைமை வகித்தார். செயலாளர் பூபாலன் முன்னிலை வகித்தார். கவிஞர் சோலைமாயவன் வரவேற்றார்.
எழுத்தாளர் அருண்பாலாஜி எழுதிய, 'ெஷப்பர்ட்ஸ் ஆப் ஹோப்' என்ற ஆளுமைகள் குறித்தான கட்டுரை நுாலினை கவிஞர் அறவொளி அறிமுகம் செய்தார்.
இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டிய சமூகச் செயல்பாட்டாளர்களைப் பற்றிய அறிமுக உரையை உணர்ச்சிபூர்வமாக எடுத்துரைத்தார். கவிஞர் சாய்மீரா எழுதிய நீலச்சிறகு கவிதை நுாலை, கவிஞர் சிவக்குமார் அறிமுகப்படுத்தினார். கவிஞர் பிரியதர்ஷினி எழுதிய, 'தோடயம்' கவிதைத் தொகுப்பினை கவிஞர் இளையவன் சிவா அறிமுகப்படுத்தினார்.ஒரு காட்சி அனுபவம் எவ்வாறு எதிர்கொள்ளப்படுகிறது என்பதைக் கொண்டுதான் ஒரு படைப்பு உருவாகிறது என்றும், கவிதை அகம், புறம் சார்ந்து எவ்வாறு உருவாகிறது என்றும் விளக்கப்பட்டது.
இளம் கவிஞர்கள் பங்கேற்ற கவியரங்கம் சிறப்பாக நடைபெற்றது. எழுத்தாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.