/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கல்லாறில் நடக்கிறது 'பூம் பேரியர்' சோதனை
/
கல்லாறில் நடக்கிறது 'பூம் பேரியர்' சோதனை
ADDED : ஏப் 22, 2025 11:43 PM

மேட்டுப்பாளையம், ; கல்லாறு இ--பாஸ் சோதனை சாவடியில் சுற்றுலா வாகனங்களில் இ--பாஸ் குறித்து சோதனை செய்ய தானியங்கி, 'பூம் பேரியர்' பொருத்தப்பட்டு, கடந்த 2 நாட்களாக சோதனை நடைபெற்று வருகிறது.
நீலகிரி மாவட்டம் மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு செல்ல, இ--பாஸ் முறை அமலில் உள்ளது.
மேட்டுப்பாளையம் அருகே கல்லாறு துாரிப்பாலம் மற்றும் கோத்தகிரி சாலையில் குஞ்சபனை அருகே என மேட்டுப்பாளையத்தில் இரண்டு இடங்களில், இ--பாஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நீலகிரி மாவட்டத்திற்கு செல்லக்கூடிய வாகனங்கள் இ--பாஸ் பெற்று இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. தற்போது, வருவாய் துறையினர், சுற்றுலா வாகனங்களில் இ--பாஸ் குறித்து சோதனை செய்கின்றனர். கல்லாறில் தானியங்கி, 'பூம் பேரியர்' பொருத்தப்பட்டுள்ளது. இதில் வாகனங்களை வைத்து சோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதுகுறித்து நீலகிரி வருவாய் துறையினர் கூறுகையில், ''கல்லாறு சோதனை சாவடியில் 'பூம் பேரியர்' பொருத்தப்பட்டு வாகனங்களை அவ்வழியாக இயக்கி சோதனை செய்யப்படுகிறது. இரண்டு நாட்களாக இந்த சோதனை நடைபெற்று வருகிறது.
விரைவில் பூம் பேரியர் பயன்பாட்டிற்கு வரும். அவ்வாறு பயன்பாட்டிற்கு வரும் போது, இ--பாஸ் பெறும் வாகனங்களின் எண்களை வைத்து தானியங்கி முறையில் 'பூம் பேரியர்' சோதனை செய்து வாகனங்களுக்கு வழிவிடும், என்றனர்.---