ADDED : மார் 24, 2025 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; அ.தி.மு.க., சார்பில், பூத் கமிட்டி அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஒவ்வொரு பூத்துக்கும், மூன்று பெண்கள், ஆறு ஆண்கள் என ஒன்பது பேர் அடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.
பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தும் கூட்டம் கரியாம்பாளையத்தில் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் நேற்று நடந்தது. இதில் ஜெ. பேரவை மாநில இணைச் செயலாளர் முகிலன் பேசுகையில்,' அ.தி.மு.க., பூத் கமிட்டி தான் கட்சியின் முக்கிய ஆணிவேர். அதை சரியாக அமைக்க வேண்டும்' என்றார்.
கூட்டத்தில் வாக்காளர் பட்டியலை சரி பார்க்க வேண்டும். இறந்தோர், இடம்பெயர்ந்தோர் ஆகியோரின் பெயர்களை நீக்க வேண்டும். புதிய வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என கமிட்டி உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.