/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் பவுண்டரி திறன் மேம்பாட்டு மையம்; தமிழக அரசு ரூ. 24 கோடி நிதியுதவி
/
கோவையில் பவுண்டரி திறன் மேம்பாட்டு மையம்; தமிழக அரசு ரூ. 24 கோடி நிதியுதவி
கோவையில் பவுண்டரி திறன் மேம்பாட்டு மையம்; தமிழக அரசு ரூ. 24 கோடி நிதியுதவி
கோவையில் பவுண்டரி திறன் மேம்பாட்டு மையம்; தமிழக அரசு ரூ. 24 கோடி நிதியுதவி
ADDED : நவ 28, 2025 03:24 AM
கோவை: கோவையில் பவுண்டரி மேம்பாடு, திறனை அதிகரிக்கும் பயிற்சிக்கு மாநில அரசு 24 கோடி ரூபாய் நிதியுதவி அளித்துள்ளது.
சர்வதேச அளவில் வார்ப்பு இரும்புகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. கடினமான நிலையில் உருவாக்கப்படும் வார்ப்பட இரும்புகளை உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் சீனா முன்னிலையில் உள்ளது.
இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. சீனா ஆண்டுக்கு 4.5 கோடி டன் வார்ப்படங்களையும், இந்தியா 1.4 லட்சம் டன் அளவிற்கு மட்டுமே ஏற்றுமதி செய்கிறது. பெரிய இடைவெளி இருப்பதால், இந்திய பவுண்டரிகளை மேம்படுத்த திட்டமிட்டு வருகிறது.
இந்தியாவில் தற்போது 5 ஆயிரம் பவுண்டரிகள் உள்ளன. இவற்றில் 750 பவுண்டரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. 90 சதவீத பவுண்டரிகள் சிறு, குறு நடுத்தர தொழில்களாக உள்ளன.
எனவே, இவற்றை மேம்படுத்துவதிலும், தொழில்நுட்பம், பயிற்சியை உயர்த்தவும் தொழில்துறையினர் முயன்று வருகின்றனர்.
தமிழக அரசு, பவுண்டரி, உலோக தொழில்களை மேம்படுத்தி முன்னிலைப்படுத்த பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள பவுண்டரிகளில் ஆட்டோமொபைல், ஆட்டோ காம்பனென்ட்ஸ், டெக்ஸ்டைல், பம்ப், மோட்டார், சுரங்க தொழில் கட்டுமான கருவிகள், ஆற்றல் மற்றும் எரிசக்தி துறை, எண்ணெய், காஸ் நிறுவனங்களுக்கு தேவையான உபகரணங்கள், மருத்துவம், ராணுவம், வின்வெளி துறை கருவிகள் போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன.
தற்போதுள்ள நிலையில், எதிர்கால தேவைக்கு ஏற்ப இந்திய பவுண்டரி துறை இன்னும் 2.5 மடங்கு வளர்ச்சி பெற வேண்டிய நிலையில் உள்ளது.
இதை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு, பவுண்டரி மேம்பாட்டு பவுண்டேஷன் உடன் இணைந்து மோப்பேரிபாளையத்தில் உள்ள கொடிசியா தொழில் பூங்காவில், ஒரு தனித்துவமிக்க திறன்மேம்பாட்டு சிறப்பு மையத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கென 24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்டுள்ள இந்த துறையில், மேலும் திறமை வாய்ந்த பணியாளர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும். எதிர்கால தேவையும் பூர்த்தி செய்யப்படும் என, பவுண்டரி மேம்பாட்டுக் கழகம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

