/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மொபைல்போன் பறிப்பு: மேலும் ஒருவர் கைது
/
மொபைல்போன் பறிப்பு: மேலும் ஒருவர் கைது
ADDED : நவ 28, 2025 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: சேலம் லக்கம்பட்டியை சேர்ந்தவர், 21 வயது வாலிபர். தனியார் மருத்துவமனையில் தொழில்நுட்ப பிரிவில் பணிபுரிந்து வருகிறார். கடந்த வாரம், ஜீவா நகர் ரோட்டில் உள்ள தனியார் பள்ளி அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த அவருக்கு தெரிந்த மூவர் மொபைல்போனை பறித்துக் கொண்டு தப்பினர். வழக்கு பதிந்த சாய்பாபா காலனி போலீசார் மொபைல்போன் பறித்த துாத்துக்குடி புதுக்குடி முத்துராஜ், 22, கோவை வேலாண்டிபாளையம் நவீன், 26 ஆகியோரை கைது செய்தனர். தப்பயோடிய சாய்பாபா காலனியை சேர்ந்த விக்ரம், 25 என்பவரை நேற்று கைது செய்தனர்.

